தோகைமலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா
தோகைமலை தேவர் பேரவை சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கல்;
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை தேவர் பேரவை சார்பில் தோகைமலை பேருந்து நிலையம் முன்பு அவரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் தேவர் அமைப்பு நிர்வாகிகள் வாட்டர் கேன் நாகராஜ், அம்மா டீ ஸ்டால் மணி, எஸ் கே பி பூபதி, நாட்டாமை சக்திவேல், கிருஷ்ணா ஜவுளி ஸ்டோர் கோபி, கார்த்தி, டூவீலர் மெக்கானிக் குமார், பிரபாகரன், கருப்பையா, ராதா, பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்