செங்கமா முனியப்பன் கோவில் பகுதியில் நடப்பட்ட பனை விதைகள்  

குமாரபாளையம் அருகே செங்கமா முனியப்பன் கோவில் பகுதியில் பனை விதைகள் நடப்பட்டன.;

Update: 2025-10-30 15:01 GMT
தமிழ்நாடு 6 கோடி பனை விதை இயக்கம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக, குமாரபாளையம்  பல்லக்காபாளையம் செங்கமா முனியப்பன் கோவிலுக்கு சொந்தமான  பூமியில்  பனை விதை விதைப்பு நடந்தது. இந்து சமய அறநிலைத்துறை, உதவி ஆணையர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட கலெக்டர் துர்கா வழிகாட்டுதல்படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் விதைக்கப்பட்டது. ஆய்வாளர் வடிவுக்கரசி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர் மற்றும் தீனதயாளன், தலைவர் ஜம்புலிங்கம், அறங்காவலர் நாகராஜ், விடியல் பிரகாஷ் பங்கேற்றனர்.  பல்லாக்காபாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  பனை விதைகளை  விதைத்தார்கள்.

Similar News