தண்ணீர் வினியோகம் சீராக்கிய கவுன்சிலருக்கு பாராட்டு
குமாரபாளையத்தில் தண்ணீர் வினியோகம் சீராக்கிய கவுன்சிலருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது;
குமாரபாளையம் சத்யாபுரி பகுதி 11வது வார்டில் குடிநீர் வினியோகம் சரிவர செயல்படாத நிலை இருந்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனை வார்டு கவுன்சிலர் ஜேம்ஸ் வசம் தெரிவித்தனர். இது குறித்து நகராட்சி குடிநீர் வழங்கல் துறை அலுவலரிடம் பேசி, தற்போது குடிநீர் சீராக கிடைக்கும்படியும், குறைவாக வந்த தண்ணீர் தற்போது நிறைவாக வரும்படியும் நடவடிக்கை மேற்கொண்டார். இதனால் கவுன்சிலருக்கு வார்டு பொதுமக்கள் மாலை அணிவித்து தங்கள் நன்றியை செலுத்தினர்.