தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவருந்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் சி..பி..எம். சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் உணவு அருந்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உரிய விசாரணை செய்து நிவாரணம் வழங்கவும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சந்திரமதி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் சக்திவேல், துரைசாமி, சரவணன், லட்சுமணன், ரவி நகர குழு செயலாளர் கந்தசாமி, வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர். கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.