கல்லறை திருநாள் அனுசரிப்பு
குமாரபாளையத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.;
குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகில் உள்ள சமத்துவ மயானத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. சமாதிகளின் பகுதிகள் தூய்மை செய்யப்பட்டு, தண்ணீர் தெளித்து கோலங்கள் போட்டனர். மலர்களை சமாதிகளின் மேல் அலங்கரித்தனர். இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து ஜெபம் செய்து வழிபட்டனர். இதில் கிறித்துவ சமுதாயத்தினர் பெருமளவில் பங்கேற்றனர்.