மாநில அளவிலான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி

மாநில அளவிலான மல்யுத்த. சாம்பியன்ஷிப் போட்டி குமாரபாளையத்தில் நடந்தது.;

Update: 2025-11-02 15:58 GMT
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில், எட்டாவது மாநில அளவிலான 15 வயதிற்குட்பட்டோர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி குமாரபாளையத்தில் நடந்தது. தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த சங்கத்தின் பொதுச்செயலர் மற்றும் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் லோகநாதன் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.எம். . கல்வி நிறுவன தலைவர் மதிவாணன் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் நாமக்கல், கரூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து, 250க்கும் மேற்பட்ட மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். 52 கிலோ எடைப்பிரிவில் கடலூர் பிரித்திவிராஜ், தங்கப்பதக்கமும், நாமக்கல் மவுலீஸ்வரன் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். மகளிர் பிரிவில் 66 எடைப்பிரிவில் சேலம் ஹேசியா தங்கபதக்கம், நாமக்கல் சவுந்தர்யா வெள்ளிப்பதக்கம், கிருஷ்ணகிரி அனுஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் விருதை கடலூர் மாவட்டம் மல்யுத்த சங்கத்தின் பொதுச செயலர் கோடீஸ்வரன் பெற்றார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு மதிவானன் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். இந்த போட்டியின் நடுவர்களாக ரஞ்சிதா, வர்மா பங்கேற்றனர்.

Similar News