டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார்.;

Update: 2025-11-02 16:02 GMT
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியில் வசிப்பவர் சின்னமுனியன், 54. கூலி. இவர் அக். 25, மாலை 01.:45 மணியளவில், ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, தனது டி.வி.எஸ். 50 வாகனத்தில் சேலம் கோவை புறவழிச்சாலையை கடக்க முயற்சித்த போது, அவ்வழியாக வேகமாக வந்த ஆடி கார், இவர் வந்த வாகனம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு, சின்னமுனியன் படுகாயமடைந்தார். இவர் எரோடே தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். போலீசார் விசாரணையில் சின்னமுனியன் மது குடித்து வாகனம் ஓட்டியது தெரியவந்தது. குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர், ஈரோடு, காசிபாளையம், நூல் வியாபாரி அருண் பிரசாத், 40, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News