ரேசன் கடைகள் அருகே அரிசி கடத்துபவர்களால் வெட்டவெளியில் வைக்கப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்

குமாரபாளையம் ரேசன் கடைகள் அருகே அரிசி கடத்துபவர்களால் ரேசன் அரிசி மூட்டைகள் வெட்ட வெளியில் வைக்கப்பட்டது.;

Update: 2025-11-07 12:35 GMT
குமாரபாளையம் ராஜா வீதி, காளியம்மன் கோவில் அருகே இரண்டு ரேசன் கடைகள் உள்ளன. சற்று தள்ளி சவுண்டம்மன் கோவில் அருகே ஒரு ரேசன் கடை உள்ளது. மூன்று ரேசன் கடைகள் இருக்கும் இந்த பகுதியில் ரேசன் அரிசி கடத்துபவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வாங்கிய ரேசன் அரிசிகளை மூட்டைகளாக கட்டி, வைத்துள்ளனர். இதனை அந்த கடைக்காரர்கள் கூட கேட்பது இல்லை. பல நாட்களாக இது போல் நடந்து வருகிறது என வட்ட வழங்கல் அதிகாரிகள் வசம் சொன்னாலும் எவ்வித நடவடிக்கை இல்லை. அதிகாரிகளும் இதற்கு உடந்தையா? எனும் சந்தேகம் பொதுமக்கள் மனதில் எழுகிறது. இப்படிப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News