தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செல்போன் டார்ச் லைட் அடித்து, பாட்டு பாடி நூதன முறையில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

நாமக்கல் பூங்கா சாலையில் மாவட்ட தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய மாலை நேர நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2025-11-07 15:48 GMT
அப்போது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் போஷான் டிராக்கர் செயலியில் முக அங்கீகாரம் பதிவேற்றம் செய்வதை உடனடியாக கைவிட வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி, கால முறை ஊதியம் வழங்க வேண்டும், பணி ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி 10 லட்ச ரூபாய் மற்றும் 6 லட்ச ரூபாய் பணிக்கொடை வழங்க வேண்டும், பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், 1993-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செல்போன் டார்ச் லைட் அடித்து, பாட்டு பாடி நூதன முறையில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் முழக்கத்தை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்

Similar News