டூவீலரில் சென்றவர்கள் நிலை தடுமாறி விழுந்து இருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்றவர்கள் நிலை தடுமாறி விழுந்து இருவர் படுகாயமடைந்தனர்.;
ஈரோட்டை சேர்ந்த கோவிந்தராஜ், 51, நாச்சிமுத்து, 40, இருவரும் கட்டிட தொழிலாளிகள். அக்.30 மாலை 03:45 மணியளவில் கட்டிட வேலை சம்பந்தமாக.சங்ககிரி சென்று, வேலை விசயமாக பேசிவிட்டு, ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில், கோவிந்தராஜ் ஓட்ட, நாச்சிமுத்து பின்னால் உட்கார்ந்தவாறு வந்து கொண்டிருந்தார்கள். விவேகானந்தா கல்லூரி அருகே வந்த போது, சாலையோரமாக இருந்த மணல் திட்டில் மோதி, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.