அரசு பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது;

Update: 2025-11-09 10:54 GMT
குமாரபாளையம் புத்தர் தெரு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் நாகராஜன் தலைமையில் நடந்தது. குமாரபாளையம் எஸ்.ஐ. நடராஜன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாணவர்களுக்கு போதைப்பொருள் தீங்கினையும், வாழ்க்கை கல்வி முறைகளையும் பற்றி மாணவர்களுக்கு கூறினார். இது குறித்து பேச்சு, கட்டுரை, வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போதைப் பொருட்களின் தீமைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டன. போதை பொருட்கள் பயன்படுத்த மாட்டாம், என மாணாக்கர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள் ரகுநாதன், கார்த்திகாயினி ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.. ஆசிரியர் சிவகுமாரன் நன்றி கூறினார்

Similar News