பெயிண்டர் தற்கொலை போலீசார் விசாரணை

குமாரபாளையத்தில் பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.;

Update: 2025-11-11 13:23 GMT
குமாரபாளையம் அருகே சத்யா நகரில் வசிப்பவர் சதீஷ், 20. பெயிண்டர். இவர் நேற்றுமுன்தினம் மாலை 03:40 மணியளவில், தங்கள் வீட்டில் உள்ள வேப்ப மரத்தில் சேலையால் தூக்கு மாட்டிகொண்டார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க, நேரில் வந்த பெற்றோர் பழனிச்சாமி, பொன்னம்மாள், அண்ணன் விஜய் உள்ளிட்ட உறவினர்கள், இவரை குமாரபாளையம் அரசு மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News