டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் வர வேண்டி ஆர்.டி.ஒ. வசம் மனு
டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் வர வேண்டி ஆர்.டி.ஒ. வசம் மனு வழங்கப்பட்டது.;
அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முயற்சியினால் குமாரபாளையம் தாலுக்கா துவங்கப்பட்டது. இதன் அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைய, முன்னாள் நகராட்சி தலைவர் சேகர் தலைமையில் அனைத்து கட்சியினர் ஓரணியில் திரண்டு, வலியுறுத்தியதன் பேரில், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தில் 2016, பிப். 27 முதல் செயல்பட துவங்கியது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட துவங்கியது. குமாரபாளையம் பொதுமக்கள் நீதிமன்ற பணிகளுக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் சென்று வந்த நிலையில், குமாரபாளையத்தில் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது. த1ற்போது டி.எஸ்.பி. அலுவலகம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. ஆனால், டி.எஸ்.பி. அலுவலகம் பள்ளிபாளையம் பகுதியில் அமையவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து ஆர்.டி.ஒ. லெனின் வசம் மனு வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் பிரகாஷ், மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், காங்கிரஸ் நகர செயலர் ஜானகிராமன், அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலர் நாகராஜன், ,பா.ஜ.க. சுகுமார், தமிழ் தேசிய பேரியக்கம் ஆறுமுகம், விடியல் ஆரம்பம் பிரகாஷ் ,பஞ்சாலை சண்முகம். மதிமுக நகர செயலாளர். நீலகண்டன் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.