கேபிள் பதிக்கும் பணியால் குடிநீர் குழாய் உடைப்பு, கண்டுகொள்ளாத ஒப்பந்ததாரர்
குமாரபாளையம் அருகே கேபிள் பதிக்கும் பணியால் குடிநீர் குழாய் உடைப்பும் ஏற்படுத்தப் பட்டது.;
குமாரபாளையம் அருகே ஆனங்கூர் சாலை மேட்டுக்கடை பகுதியிலிருந்து கல்லங்காட்டு வலசு பகுதிக்கு கேபிள் பதிக்கும் பணியினை ஒப்பந்த பணியாளர்கள் செய்து வருகிறார்கள். பொக்லின் உதவியுடன் இந்த கேபிள் பதிப்பதால், பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர், பணியாளர்கள் என யாரும் கண்டுகொள்ளவில்லை. தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். மேற்படி பணியாளர்களிடம் சொன்னாலும் பலனில்லை. இது குறித்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, தண்ணீர் குழாயை சீரமைக்கவும், கேபிள் பதிக்கும் பணியாளர்கள் வசம் எச்சரிக்கை செய்யவும் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.