கோவை மற்றும் நாமக்கல் செல்வதற்கு அரசு பேருந்துகள் விடுமாறு எம்.பி. வசம் மனு

குமாரபாளையத்திலிருந்து கோவை மற்றும் நாமக்கல் செல்வதற்கு அரசு பேருந்துகள் விடுமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஈரோடு எம்.பி. பிரகாஷ் வசம் மனு கொடுக்கப்பட்டது.;

Update: 2025-11-12 14:14 GMT
குமாரபாளையத்திலிருந்து கோயம்புத்தூருக்கு செல்வதென்றால் பவானி லட்சுமிநகர் அல்லது ஈரோடு சென்று கோவைக்கு செல்ல வேண்டி உள்ளது. அதேபோல் நாமக்கல் செல்ல வேண்டும் என்றால் பள்ளிபாளையம் மற்றும் திருச்செங்கோடு செல்ல வேண்டும். குமாரபாளையம் பகுதியில் ஹேண்ட் லூம் மற்றும் பவர்லூம் ஜவுளி உற்பத்தி அதிகம் என்பதால் கோவை வியாபாரிகள் மற்றும் வடமாநில வியாபாரிகள் குமாரபாளையம் வரவும், தொழில் வளம் பெருகவும் உதவியாக இருக்கும்.. அவசர சிகிச்சைக்காக கோயம்புத்தூர் மருத்துவமனைக்கு மற்றும் அவசர தேவைக்கு செல்ல வேண்டுமென்றால் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி குமாரபாளையத்திலிருந்து கோவை மற்றும் நாமக்கல் செல்வதற்கு அரசு பேருந்துகள் விடுமாறு மக்கள் நீதி மய்யம் மற்றும் பொதுமக்கள் சார்பில் ஈரோடு எம்.பி. பிரகாஷ் வசம் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு எம்.பி.பிரகாஷ் கடிதம் அனுப்பியுள்ளார். இதில் சேலம் ம.நீ.ம. மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News