தாலுக்கா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம் துவக்கம்
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம் துவக்கப்பட்டது.;
நாமக்கல் கலெக்டர் உத்திரவின் பேரில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம் துவக்க விழா தாசில்தார் பிரகாஷ் தலைமையில் நடந்தது. வாக்காளர்கள் ஒவ்வொருவரும் எஸ்.ஐ.ஆர். எனப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுதும் இந்த படிவம் கொடுக்கும் பணியில் ஓட்டுச்சாவடி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த படிவம் பூர்த்தி செய்வதில் பொதுமக்கள் பலருக்கு பெரும் குழப்பம் நிலவி வருகிறது.இதற்கு தீர்வாக, குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் எஸ்.ஐ.ஆர். உதவி மையம் துவக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த படிவம் சம்பந்தமான சந்தேகங்களை இங்கு சென்று நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் துவக்க விழாவில் குமாரபாளையம் தொகுதி தேர்தல் பிரிவு தாசில்தார் செல்வராஜ், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரி, முதுநிலை வருவாய் அலுவலர் சரவணகுமார், வி.ஏ.ஓ. முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.