அ.ம.மு.க.விலிருந்து அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு்முன்னாள் அமைச்சர் பாராட்டு

குமாரபாளையம் அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகி  அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2025-11-13 16:11 GMT
குமாரபாளையம் அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகி  அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். பல்வேறு கட்சியிலிருந்து அ.தி.மு.க.வில் பெரும்பாலோர் இணைந்து வருகின்றனர். இத  ஒரு கட்டமாக குமாரபாளையம் ஒன்றிய பகுதியிலிருந்து அ.ம.மு.க. மற்றும் ஓ.பி.எஸ். அணியிலிருந்து விலகி, அ.ம.மு.க. ஒன்றிய செயலர் ராஜவேல், பொருளர் குணசேகரன், ஓ.பி.எஸ். அணி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ராஜமாணிக்கம், ஒன்றிய செயலர் யுவராஜ் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க.வில்,  இணைந்தனர். இவர்களுக்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி சால்வை அணிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்  அட்டை வழங்கி பாராட்டினார். இதில் வடக்கு ஒன்றிய செயலர் குமரேசன், தெற்கு ஒன்றிய செயலர் செந்தில், குமாரபாளையம் நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி, துணை செயலர் திருநாவுக்கரசு, உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News