பீகாரை போல தமிழகத்திலும் பிஜேபி வெற்றி பெறும்.செந்தில்நாதன் கரூரில் பேட்டி.
பீகாரை போல தமிழகத்திலும் பிஜேபி வெற்றி பெறும்.செந்தில்நாதன் கரூரில் பேட்டி.;
பீகாரை போல தமிழகத்திலும் பிஜேபி வெற்றி பெறும்.செந்தில்நாதன் கரூரில் பேட்டி. பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை காட்டிலும் தனி பெரும் வெற்றியை பிஜேபி கூட்டணி பெற்றுள்ளது. 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் இந்தியா முழுவதும் பிஜேபி கட்சியின் சார்பில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா அருகே பாரதிய ஜனதா கட்சியின் கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பீகார் வெற்றியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரூர் மாவட்ட பிஜேபி தலைவர் செந்தில்நாதன் , பிஜேபி கட்சியின் மீது நாட்டு மக்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளனர்.பிரதமர் மோடி அவர்களின் வெற்றிகரமான செயல் திட்டங்களால் தொடர்ந்து பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று வருகிறது.இன்று 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பீகார் மாநிலத்தில் வெற்றி பெற்று தனி பெரும் ஆட்சி அமைக்க உள்ளது. இதேபோல 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை பெறும் என்றார்.