இராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே பயிற்சி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா..
இராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே பயிற்சி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா..;
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே பயிற்சி பள்ளியின் சார்பில் மாணவ, மாணவியர்களுக்கு கராத்தே பட்டயம் தகுதி தேர்வு மற்றும் தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழாவும் நடைபெற்றது. இதில் இராசிபுரம் பகுதியை சேர்ந்த 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு கராத்தே தற்காப்பு கலை நுணுக்கங்கள், உடல் தாங்கும் திறன், கட்டா, குமிட்டி போன்ற பயிற்சிகளில் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாடு சோட்டாகான் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் இராசிபுரம் சரவணன், பயிற்சியாளர்கள் கிருஷ்ணன், வெங்கடாசலம், மாணிக்கம், பிரபு, விக்னேஷ், கிஷோர், அஜய், கோபாலகிருஷ்ண்,ராஜகுமாரி, தீபா, சபரீஸ்வரி ஆகியோர் தேர்வுகளை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்தனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு எஸ்.ஆர்.வி. ஹைடெக் பள்ளியின் தலைவர் திரு.ஏ. ராமசாமி அவர்களும், எஸ்.ஆர்.வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் செயலாளர் திரு.பி. சுவாமிநாதன் அவர்களும் பதக்கங்கள், சான்றிதழ்களும் வழங்கி தற்காப்பு கலையின் முக்கியத்துவத்தை குறித்தும், உடல் ஆரோக்கியத்தின் தேவைகளை குறித்தும் சிறப்புரையாற்றினர். கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் புத்தூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் கிருஷ்ணன் வரவேற்று பேசினார், முடிவில் பயிற்சியாளர் இராசிபுரம் சரவணன் நன்றி கூறினார்.