ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ மாரியம்மன், மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா முன்னிட்டு நாடார்கள் மண்டபக்கட்டளை தீர்த்த குடம் எடுத்த பெண்கள்.

ராசிபுரம் அருள்மிகு ஸ்ரீ செல்லாண்டியம்மன், ஸ்ரீ மாரியம்மன், மற்றும் ஆஞ்சநேயர் திருக்கோயில் திருத்தேர் திருவிழா முன்னிட்டு நாடார்கள் மண்டபக்கட்டளை தீர்த்த குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்...;

Update: 2025-11-20 13:46 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஐப்பசி மாதம் பூச்சாட்டுதல் விழா தொடங்கி தினந்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள், வான வேடிக்கைகள், அம்மன் சிறப்பு அலங்காரங்கள், அபிஷேகங்கள் போன்றவை நடைபெற்று வந்தன. தொடர்ந்து பல்வேறு கட்டளைதாரர்கள் சார்பில் நடைபெறும் இந்த திருவிழாவில் விடையாற்றி கட்டளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு வியாழக்கிழமை நாடார்கள் மண்டபக்கட்டளை நடைபெற்றது. இந்த நிகழ்வில் டாக்டர் ஸ்ரீ நடராஜ், ஜெயா தலைமை வகித்தார்.மற்றும் துரைசாமி செந்தில்குமார் கல்லாங்குளம் ஆசிரியர் சுப்பிரமணி, பழனிவேலு கலாவதி, எஸ்.கே. செந்தில்குமார், சந்தோசம், செந்தில்குமார் பழனியப்பன், நிர்மலா, வரதராஜ் ,குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசிபுரம் ஸ்ரீ செல்லாண்டியம்மன் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் கோவிலில் இருந்து நாடார் குல பொதுமக்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தீர்த்த குடம் எடுத்து முக்கிய வீதி வழியாக சுற்றி வந்து அருள்மிகு ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் அன்னதானம் வழங்கி சிறப்பித்தனர். பின்னர் ஈரோடு சென்னிமலை தமிழன் பெருஞ்சலங்கை ஆட்ட குழுவினரின் பாரம்பரிய சலங்கை ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இராஜ மேளம் ஒழிக்க வான வேடிக்கை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் வரதராஜன் ராதாமணி, பிரதீப் குமார், மாதேஸ்வரன் தமிழரசி, தீன தயாளன், பழனிச்சாமி லட்சுமி, விஜயன் சங்கீதா, அபிநவ், மற்றும் சான்றோர் நாடார் மகாஜன சங்கம் தலைவர் பிரேம்குமார், பொதுச் செயலாளர் துரைசாமி, பொருளாளர் புவனேஸ்வரி, துணைத் தலைவர் வைகை ரவி, துணை பொது செயலாளர் விஜய செல்வகுமார், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரங்கசாமி, வெங்கடாசலம், செந்தில்குமார் நேசமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News