ராசிபுரம் ஆர் சி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி சார்பில் கராத்தே பட்டய தேர்வு..
ராசிபுரம் ஆர் சி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி சார்பில் கராத்தே பட்டய தேர்வு..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர் சி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமி சார்பாக இந்த கல்வியாண்டிற்கான கராத்தே பட்டய தேர்வு நடைபெற்றது. ஆர் சி தூய இருதய முப்பள்ளிகளில் இருந்து 72 மாணவர்கள் கலந்து கொண்டனர். தற்காப்பு கலையின் ஆழ்ந்த நுணுக்கங்களையும் மற்றும் கட்டா, குமிட்டி ஆகிய பயிற்சிகளையும் செய்து தேர்வில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு சோட்டா கான் கராத்தே அகாடமியின் தலைமை பயிற்சியாளர் வி. சரவணன் அவர்கள் இந்த தேர்வை நடத்தினார். முப்பள்ளிகளின் கராத்தே பயிற்சியாளர்கள் பிரபு, மற்றும் உதவி பயிற்சியாளர் சிம்பு ஆகியோர் உடனிருந்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி தேர்வை சிறப்பாக நடத்தினர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஆர் சி தூய இருதய முப்பள்ளிகளின் தாளாளர் அருட் சகோதரி ஜீவா மற்றும் தலைமை ஆசிரியை அருட்சகோதரி மோனிகா மற்றும் ஆங்கில வழிப் பள்ளியின் தலைமையாசிரியை அருட்சகோதரி சத்யா ஆசிரியர் லியோ ஜேசுதாஸ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி அனைவரையும் பாராட்டி கௌரவித்தனர். மேலும் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் ஆசிரியர் சாமிநாதன் வரவேற்று பேசினார். மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளியில் தலைமை ஆசிரியை அருட் சகோதரி மோனிகா சிறப்புரை வழங்கி மாணவர்களின் தற்காப்பு கலை பயிற்சி போன்றவற்றை எடுத்து கூறி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.