திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான அருள்மிகு குழந்தை வேலாயுதசாமி திருக்கோவில் (திரு ஆவினன்குடி) குடமுழுக்கு திருவிழா வருகின்ற 08.12.2025-அன்று நடைபெறுவதையொட்டி அனைத்துத்துறை அலுவலர்களுடனாக ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (25.11.2025) நடைபெற்றது. அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., பழனி வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், பழனி வட்டாட்சியர் .பிரசன்னா, துணை ஆணையர் (பழனி திருக்கோவில்) வெங்கடேஷ் அவர்கள் ஆகியோர் உட்பட பலர் உள்ளனர்.