திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில்

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கொடைக்கானல் தாலுகாக்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையங்களின் திறப்பு விழா;

Update: 2025-11-25 14:57 GMT
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், கொடைக்கானல் தாலுகாக்களில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சமரச தீர்வு மையங்களின் திறப்பு விழா இன்று காணொளி வாயிலாக முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமையில் நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் தாலுகா சமரசம் தீர்வு மையங்களை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா திறந்து வைத்து உரையாற்றினார். இவ்விழாவில் திண்டுக்கல், கொடைக்கானல், மற்றும் ஆத்தூர் நீதிபதிகள், சமரச வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்

Similar News