திண்டுக்கல்லில் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ய முயன்றனர்.
இரண்டு பேர் கைது;
வெள்ளோடு, நரசிங்கபுரம் அருகே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக உறவினரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி - 18 வயது சிறுவன், பெண் உட்பட 4 பேர் கைது திண்டுக்கல், வெள்ளோடு, நரசிங்கபுரம், மாதாமலை நகரில் கழிவுநீர் ஊற்றுவது தொடர்பாகவும், கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவும் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர் சலேத்மேரி என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சலேத்மேரி மற்றும் வெள்ளோடு-ஐ சேர்ந்த மணிகண்டன், செந்தில்குமார், மற்றும் 18 சிறுவன் ஆகியோர் ராஜ்குமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்ய முயன்றனர். இதுகுறித்து புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுபத்ரா அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண்பிரசாத் காவலர்கள் கங்காதரன், அந்தோணிபீட்டர் ஆகியோர் அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட சலேத்மேரி, மணிகண்டன், செந்தில்குமார், 18 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்