சிவகிரியில் கம்யூனிஸ்ட் பிரமுகர் தீ குளிக்க முயற்சி பரபரப்பு
சிவகிரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரூராட்சி மன்ற கவுன்சிலர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருணாச்சலம் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு;
தென்காசி மாவட்டம் சிவகிரியில் காட்டு யானை மற்றும் வன விலங்குகள் விலை நிலங்களை சேதப்படுத்தி வந்தது. விளை நிலங்களை யானை சேதபடுத்துவதை தடுக்காத வனத்துறையை கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று வனத்துறை அலுவலகம் அருகே போராட்டம் நடந்தது இதில் பேரூராட்சி மன்ற கவுன்சிலர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருணாச்சலம் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்தனர்