அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசமைப்பு முகப்புரையை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்

மேலும், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 16 பணிமனைகளில், அந்தந்த கிளை மேலாளர்கள் முன்னிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்;

Update: 2025-11-26 07:58 GMT
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டலத்தில், பொதுமேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், போக்குவரத்து அலுவலர்களும் தொழிலாளர்களும் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு இந்திய அரசமைப்பு முகப்புரையை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 16 பணிமனைகளில், அந்தந்த கிளை மேலாளர்கள் முன்னிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Similar News