துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிவபத்மநாதன் கல்வி உபகரணங்கள் வழங்கினார்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் கல்வி உபகரணங்களை முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்;
கல்லூத்தில் தமிழ்நாடு துணை முதல்வர் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் டிடிடிஏ தொடக்கப்பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் என்எல் சிவன் பாண்டியன் தலைமையில் நடந்தது பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர் பள்ளி தாளாளர் வரவேற்றார் இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் 1 முதல் 3 வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு 45 இருக்கைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் மரக்கன்றுகள் இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோமு, ஒன்றிய கவுன்சிலர்கள் நாகராஜ், மகேஸ்வரி சத்யராஜ் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் பொன்மோகன்ராஜ் முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் தினேஷ் பாண்டியன். கிளை செயலாளர்கள் முருகன், ஜெகன் காளிதாஸ், நிர்வாகிகள் லிங்கம் வேல்முருகன், ராமர் களஞ்சியம், சாமி, அருள்மணி, ஜெயகுமார் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், முருகன் செல்லக்காளி சதீஷ் மணி நாகல்குளம் காசி பாண்டியன் துத்திகுளம் மனுவேல் ராஜ் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரி கிருஷ்ணன் ராஜபாண்டியன் குணா, வழக்கறிஞர் ஹரி கிருஷ்ணன் கரும்பனூர் மயில்ராஜ் மாரியப்பன் பொன்னுத்துரை லட்சுமண பெருமாள் மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்