தென்காசி மாவட்டம் முழுவதும் இன்று நடந்த டாப் டென் செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் இன்று நடந்த நிகழ்வுகளின் தொகுப்பு;
நவம்பர் 26 தென்காசி மாவட்ட செய்தி துளிகள் 1. தென்காசி அருகே நடந்த பேருந்து விபத்தில் புளியங்குடியை சேர்ந்த தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வழங்கினார். புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக அனைத்து நீர் நிலைகளிலும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் காணப்படுகிறது. 3. தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலுக்கு நாளை ஒரு கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் கிரிவல பாதை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நாளை (நவம்பர் 27) நடைபெற உள்ளது. 4. புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி, 153A துணைவிதி 5 கீழ் புதிய உறுப்பினர் புளியங்குடி சேர்மன் விஜயா சௌந்தர பாண்டியன் மற்றும் நகராட்சி ஆணையர் நாகராஜன் முன்னிலையில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 5. திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 6. தென்காசி மாவட்ட தொழில் தொடங்க முனைவோர் மாவட்ட தொழில் மையத்தை அணுகி அரசு மானியத்துடன் கூடிய உதவித்தொகையை பெற்றுக்கொள்ள அறிவிப்பு வெளியாகி உள்ளது. 7. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று 76 ஆவது அரசியல் அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 8. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நெல் நடுவை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 9. கார்த்திகை மாத குமார சஷ்டி விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. 10. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதி தொகுதிகளிலும் எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.