மரநாயை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
வாசுதேவநல்லூர் அருகே வீட்டில் புகுந்த மரநாயை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்;
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி அருகே ஒரு வீட்டின் உள்ளே மரநாய் ஒன்று இருப்பதை பார்த்தவர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதனை பத்திரமாக மீட்கப்பட்டு வனப்பகுதியில் விட்டனர்