வீடு இடிந்த மூதாட்டிக்கு உதவிகள் வழங்கிய ஜெயபாலன்
சாம்பவர்வடகரையில் மழையால் வீடு இடிந்த மூதாட்டிக்கு உதவிகள் வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்.;
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பூமணி என்ற மூதாட்டியின் வீடு சேதமடைந்தது அதனை தொடர்ந்து தகவலறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து விபரங்களை கேட்டறிந்து 1மாதத்திற்கான மளிகை பொருட்கள் பாய் தலையனை போர்வை கேஸ் அடுப்பு ஆகிய வீட்டு உபயோக பொருட்களை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கி வீடு பராமரிப்பு நிதியுதவி வழங்குவோம் என உத்திரவாதம் அளித்தார் உடன் பேரூர் திமுக செயலாளர் முத்து பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து கவுன்சிலர் சுடலைமுத்து உட்பட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..