சுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழா

சுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழாவில் கலெக்டர் கமல் கிஷோர்,பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ஆகியோர் பங்கேற்று பனை விதைசுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழாகளை நட்டனர்.;

Update: 2025-11-28 13:33 GMT
சுரண்டை நகராட்சி சார்பில் சுரண்டை ஆலடிபட்டி கண்டையன் குளத்தில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சி கமிஷனர் நாகராஜ் தலைமை தாங்கினார். நகராட்சி பொறியாளர் முகைதீன் முன்னிலை வகித்தார். விழாவில் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், சுரண்டை நகர் மன்ற தலைவர் வள்ளி முருகன் ஆகியோர் பங்கேற்று பனை விதைகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் ஜெயபால், நகர திமுக பொறுப்பாளர் கூட்டுறவு கணேசன், பால் என்ற சண்முகவேல், நகராட்சி தலைமை கணக்காளர் முருகன், ஆய்வாளர் மகேஸ்வரன், ஜேபஸ் பொன்னையா, கவுன்சிலர்கள் பாலசுப்ரமணியன், அமுதா சந்திரன், வேல்முத்து, ராஜ்குமார், உஷா பேபி பிரபு, ரமேஷ், மாரியப்பன், செல்வி, அம்ஷா பேகம், திமுக நிர்வாகிகள் குருங்காவனம் வெள்ளத்துரை பாண்டியன், பூல் பாண்டியன், சாமுவேல் மனோகர் மற்றும் ஏராளமான திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News