சுரண்டையில் நேற்று பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் ஜெயபாலன் அணிவித்தார்

சுரண்டை நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது;

Update: 2025-11-28 16:10 GMT
தென்காசி மாவட்டம் சுரண்டை நகர திமுக சார்பில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று பிறந்த குழந்தைக்கு சுரண்டை நகர திமுக செயலாளர் கணேசன் ஏற்பாட்டில் தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது இதில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே_ஜெயபாலன் மோதிரம் அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார் நிகழ்ச்சியில் ஆறுமுகசாமி, வர்த்தக அணி முத்துக்குமார், பூல்பாண்டியன், மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Similar News