சுரண்டை அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

சுரண்டை அருகே பாம்பு கடித்து விவசாயி பலி போலீஸார் விசாரணை;

Update: 2025-11-28 16:34 GMT
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை சோட்டையன் தெருவை சேர்ந்தவர் பாண்டி மகன் பால்ராஜ் (46) இவர் இன்று சுரண்டை அருகே உள்ள வாடியூரில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக அவரது காலில் பாம்பு கடித்தது உடனே அருகில் இருந்தவர்கள் வீ.கே.புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சுரண்டை போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News