தென்காசி மாவட்டத்தில் இன்று முக்கிய நிகழ்வுகள்
தென்காசி மாவட்டத்தின் டாப் செய்திகள்;
நவம்பர் 28 இன்று தென்காசி மாவட்டத்தின் டாப் செய்திகள் 1. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்றது 2. குற்றாலம் வரும் ஐயப்ப பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. வரும் திங்கள்கிழமை சோமவாரம் மூன்றாவது திங்கள் கிழமை என்பதால் பெண் பக்தர்களின் கூட்டமும் அதிக அளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குற்றாலம் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது 3. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆலங்குளம் சேர்மன் திவ்யா கலந்துகொண்டு இலவச மிதிவண்டி திட்டத்தினை துவக்கி வைத்தார். 4. தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக வெள்ளை கத்திரிக்காயின் விலை 150 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மொத்த விற்பனையில் 150 ரூபாயாகவும் சில்லறை விற்பனையில் 180 ரூபாய் வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட ஐந்தாம் கட்டளை பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 6. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பனிப்பொழிவின் தாக்கம் அதிகாரிகள் காணப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் விட இன்று கடும் பனிப்பொழிவின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது. மாலை 4 மணிக்கு மேலாகவே பனிமூட்டம் படர்ந்து வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது. 7. டிசம்பர் 12 சங்கரன் கோவில் மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்ப்ப முகாம் நடைபெற உள்ளது. டிசம்பர் 16ஆம் தேதி தென்காசி மாவட்ட கோட்ட அலுவலகத்திலும், டிசம்பர் 23 கடையநல்லூர் கோட்ட அலுவலகத்திலும் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 8. தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட வங்கிகளில் உரிமை கோரப்படாத வங்கிகளில் இருந்த பணம் வாரிசுதாரர்களுக்கு இன்று மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கப்பட்டது. 9. தென்காசி மாவட்ட ஆட்சியரக அரங்கில் இன்று குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 10. சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் இன்று தங்களது ஊதியத்தை உயர்த்தி தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 11. புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் இன்று எஸ் ஐ ஆர் வாக்காளர் திருத்த படிவம் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது. 12. சாம்பவர் வடகரை பேரூராட்சி பகுதியில் நவம்பர் 29 காலை 9 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. 13. தென்காசி மாவட்ட ஆட்சியர் அரங்கில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.