தென்காசி மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தென்காசி மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது;
தென்காசி தெற்கு மாவட்ட பாமக அலுவலகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியருக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்க கூறி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்தார், மாநில துணைத் தலைவர்கள் அய்யம் பெருமாள் பிள்ளை திருமலைகுமாரசாமி யாதவ் ஆகியோர் ஆலோசனை வழங்கினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட சமூக நீதி பேரவை செயலாளர் வழக்கறிஞர் கிருஷ்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் வீரபாண்டியன், மாவட்டஇளைஞரணி செயலாளர் முத்து குமார்,மாவட்ட துணைச் செயலாளர் பள்ளக்கால் கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர்கள் சிவன்ராஜ், பரமசிவன் என்ற சாமி, பெரும்பத்தூர் உதயகுமார், மாவட்ட மகளிரணி தலைவி மகேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி, மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரி, குருவி குளம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் மாரியம்மாள், ஆலங்குளம் ஒன்றிய மகளிரணி செயலாளர் மரிய செல்வம் ஆலங்குளம் பேரூர் மகளிர் சங்க செயலாளர் தேவி, தங்கம் ஆனந்தராஜ், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.