கவிஞர்.ம.திலகபாமா மாநில பொருளாளர் பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம்

திண்டுக்கல்லில்;

Update: 2025-12-02 13:35 GMT
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியார் சத்திரம் பகுதியில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசி மிரட்டிய பழனி அறநிலையத்துறை அதிகாரி லட்சுமிக்கு வன்மையான கண்டனங்கள் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக பழனி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமி தலைமையில் பழனி கோவிலில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் மற்றும் காவலாளியுடன் வந்துள்ளனர். இது தொடர்பான செய்திகளை சேகரிக்க திண்டுக்கல் பகுதியில் பணியாற்றக்கூடிய செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் வந்துள்ளனர். அப்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் லட்சுமி, அந்த இடம் தொடர்பாக சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்பொழுது கோர்ட் உத்தரவு நகலை அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர்கள் முகத்தில் தூக்கி எறிந்ததால் இருவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மீது பழனி கோவிலில் பணிபுரியக்கூடிய காவலாளிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் எம் நாடு தொலைக்காட்சியில் பணியாற்றும் செல்வா மற்றும் லோட்டஸ் தொலைக்காட்சியில் பணியாற்றும் முரளி ஆகியோர் காயமடைந்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் பத்திரிகையாளர்களை காவலர்கள் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறநிலையத் துறை உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்பதற்கு சென்ற பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அதேபோல் பத்திரிகையாளர்களைத் தாக்கிய குண்டர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். கவிஞர்.ம.திலகபாமா மாநில பொருளாளர் பாட்டாளி மக்கள் கட்சி

Similar News