வத்தலகுண்டு பகுதியில் சட்டவிரோதமாக மிலிட்டரி மதுபான பாட்டில்கள் விற்பனை செய்த முதியவர் கைது
வத்தலகுண்டு;
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய DSP.முருகன் தலைமையிலான போலீசார் வத்தலகுண்டு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வத்தலகுண்டு அராபத் பிரியாணி கடை சந்து பகுதியில் சட்டவிரோதமாக மிலிட்டரி மதுபான பாட்டில்களை விற்பனை செய்த வத்தலகுண்டுவை சேர்ந்த சடைய கவுண்டர் மகன் ரவிச்சந்திரன்(62) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 750 ML கொள்ளளவு கொண்ட 7 மிலிட்டரி மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்