திண்டுக்கல்லில் நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்

நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்;

Update: 2025-12-04 14:08 GMT
திண்டுக்கல்லில் நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் இன்று நடைபெற்ற JAAC பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுஅதனைத் தொடர்ந்து E-Filing முறையில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் போன்றவை முழுமையாக நிவர்த்தி செய்யாமல் உயர் நீதிமன்றம் ஆன்லைன் Filing செயல்படுத்துவதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றிட வேண்டும் என்றும் வழக்கறிஞர்களின் சேம நல நிதியை ரூ.25 லட்சமாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என்றும், 8-ம் தேதி (திங்கட்கிழமை) திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், 9-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்றம் வாயில் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்றும் திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்

Similar News