மணப்பாறையில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது
மணப்பாறையில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது.;
மணப்பாறையில் சோனியா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் 79 வது பிறந்தநாள் விழா திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் கோவிலில் சோனியா காந்தி நீண்ட காலம் நலமாய் வாழ சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. அப்போது காந்தி சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மணப்பாறை நகரத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நசீம், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் ராம் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் கணபதி , மாவட்டச் செயலாளர்கள் வீரபாண்டியன், கோபாலகிருஷ்ணன் மாவட்டத் துணைத் தலைவர் குமார் , நகர சிறுபான்மைச் செயலாளர் இப்ராஹிம், நகர பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், நகர பொருளாளர் பாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.