இளைஞர் அணி ஆலோசனை கூட்டம்
வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெறுகிறது;
திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகளை சந்திப்பு கூட்டம் தொடர்பாக தர்மபுரி திமுக அலுவலகத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் அசோக்குமார் கோவிந்தன் ஏற்பாட்டில்.நகர பொறுப்பாளர்கள் கௌதம். நாட்டான் மாது முன்னிலை வகித்தனர். இதில் வரும் 14ஆம் தேதி திருவண்ணாமலை நடக்கும் வடக்கு மண்டல திமுக இளைஞர் அணி மாநாட்டில் தர்மபுரி நகரில் இருந்து அதிகமானோர் பங்கேற்பது குறித்து ஆலோசனை செய்தனர். இளைஞர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்