அறந்தாங்கி பகுதியில் சாரல் மழை: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

அறந்தாங்கி, மணமேல்குடி வட்டாரங்களில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.;

Update: 2025-12-16 11:06 GMT

அறந்தாங்கி பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவியது. இந்த நிலையில் இன்று காலை முதல் அறந்தாங்கி, மணமேல்குடி வட்டாரங்களில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. காலை நேரத்திலேயே சாரல் மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர்,பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர்.சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Similar News