கரூரில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி யில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் தங்கவேல்.
கரூரில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி யில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் தங்கவேல்.;
கரூரில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி யில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் தங்கவேல். கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட வேளாண் துறை அரசு அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற கண்காட்சியில் வேளாண்மை துறை சார்ந்த பயனுள்ள தகவல்கள் அடங்கிய பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மண் பரிசோதனை தண்ணீர் பரிசோதனை வேளாண்மை நவீன முறையிலான சாகுபடிக்கு தேவையான உபகரணங்கள் தொழில் முறை செயலாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் எம்எல்ஏக்கள் இளங்கோ மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறைக்காக மத்திய மாநில அரசுகளின் செயலாக்கத்தில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் அரசு மானியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சி யில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் தங்கவேல். கரூரை அடுத்த மணவாடி பகுதியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் கரூர் மாவட்ட வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட வேளாண் துறை அரசு அதிகாரிகள் விவசாயிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற கண்காட்சியில் வேளாண்மை துறை சார்ந்த பயனுள்ள தகவல்கள் அடங்கிய பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மண் பரிசோதனை தண்ணீர் பரிசோதனை வேளாண்மை நவீன முறையிலான சாகுபடிக்கு தேவையான உபகரணங்கள் தொழில் முறை செயலாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த அரங்குகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் எம்எல்ஏக்கள் இளங்கோ மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோர் பார்வையிட்டு விவசாயிகளிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டத்தில் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண்துறைக்காக மத்திய மாநில அரசுகளின் செயலாக்கத்தில் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் அரசு மானியம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.