புதிய நிறுவனம் திறப்புவிழா தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் பங்கேற்பு.

நாமக்கல், சேலம் சாலை, எம்ஜிஎம் திரையரங்க வளாகத்தில் ஜோஜோ ஐஸ்கிரீம் பார்லர் திறப்புவிழா நடைபெற்றது.;

Update: 2026-01-05 14:06 GMT
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி திறந்துவைத்து, நிறுவன பங்குதாரர்கள் விஜயகுமார், செந்தில் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், மாநில இணை செயலாளர் தேவி உதயகுமார், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராயல் பத்மநாபன், மாநகர அமைப்பாளர் அருண்குமார், துணை அமைப்பாளர் சிவக்குமார், செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Similar News