போலியாக பதிவு செய்யப்பட்ட பத்திர பதிவை ரத்து செய்யக்கோரி போராட்டம்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்;
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 12) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் களக்காடு மேலப்பத்தை பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதில் போலியாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என கண்டன கோஷத்தை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.