ஓட்டுனர்களுக்கு ஆலங்குடி மோட்டார் அலுவலர் அறிவுரை
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டிவிபத்துகளைத் தவிர்க்க ஓட்டுநர்களுக்கு ஆலங்குடி மோட்டார் வாகன அலுவலர் மணிமாறன் அறிவுரை.;
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டிவிபத்துகளைத் தவிர்க்க ஓட்டுநர்களுக்கு ஆலங்குடி மோட்டார் வாகன அலுவலர் மணிமாறன் அறிவுரை. வாகனங்களை மெதுவாகவும் கவனமாகவும் ஓட்ட வேண்டும். இரவு நேரங்களில் அதிக ஒளி தரும் ஹைபீம் விளக்குகளை தேவையற்ற வகையில் பயன்படுத்துவது, எதிரில் வரும் வாகன ஓட்டுநர்களின் பார்வையை பாதித்து விபத்துகளுக்கு காரணமாகும். எதிரில் வாகனம் வரும் சமயங்களில் ஹைபீம் விளக்குகளை அணைத்து, லோ பீம் விளக்குகளை பயன்படுத்தும் பழக்கத்தை ஓட்டுநர்கள் கடைபிடிக்க வேண்டும்” மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது சீட் பெல்ட் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்க வேண்டாம் என உறுதிமொழி ஏற்று அறிவுறுத்தினர்.