விசில் சின்னம் அறிவித்தமைக்கு த.வெ.க .வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கிகொண்டாட்டம்
விசில் சின்னம் அறிவித்தமைக்கு குமாரபா ளையம் த.வெ.க.வினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.;
தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தேர்தல் ஆணையத்தால் விசில் சின்னம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் த.வெ.க. சார்பில், குமாரபாளையம் பள்ளிபாளையம் பிரிவு, பஸ் ஸ்டாண்ட், ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் உள்ளிட்ட நான்கு பகுதியில் பட்டாசு வெடித்தும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு விசில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் தெற்கு நகர செயலர் சக்திவேல், வடக்கு நகர செயலர் ஆறுமுகம், மேற்கு நகர செயலர் சோமு தலைமை வகித்தனர். விஜய் வாழ்க, த.வெ.க. கட்சி வாழ்க, என உற்சாகமாக கோஷங்கள் எழுப்பினர். விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். மகளிரணி மாநில துணை செயலர் விஜயலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சாந்தி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.