ராசிபுரத்தில் விபத்தை தடுக்க நடவடிக்கை: சிகப்பு மற்றும் மஞ்சள் பிரதிபலிப்பான் ஓட்டி விழிப்புணர்வு...
ராசிபுரத்தில் விபத்தை தடுக்க நடவடிக்கை: சிகப்பு மற்றும் மஞ்சள் பிரதிபலிப்பான் ஓட்டி விழிப்புணர்வு...;
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு துணை போக்குவரத்து ஆணையர் ஈரோடு திரு.D.தாமோதரன் அவர்களின் தலைமையில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் திரு. M.பதுவை நாதன் அவர்கள் முன்னிலையில், மோட்டார் வாகன ஆய்வாளர் திரு. A. செல்வகுமார், மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் V.K. ஜெகதீஷ் குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு . நடராஜன், ராசிபுரம் காவல் உதவி ஆய்வாளர் ஈஸ்வரன், மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ராசிபுரம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மேம்பாலங்களில் அதிக விபத்துக்கள் நடக்கும் பகுதிகளில் விபத்துக்களை தடுக்கும் வண்ணம், சிகப்பு மற்றும் மஞ்சள் பிரதிபலிப்பான் பட்டைகள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் விபத்துகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நெடுஞ்சாலைத் துறை அவர்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டது, மற்றும் டிராக்டர் போன்ற பல்வேறு போக்குவரத்து அல்லாத வாகனங்களில் சிகப்பு ,மஞ்சள் வெள்ளை போன்ற பிரதிபலிப்பான் பட்டைகள் ஒட்டப்பட்டது. தொடர்ந்து தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு தொடர்ந்து ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ. செல்வகுமார், அவர்கள் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.