கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா.

பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா. கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு வழங்கினார்.;

Update: 2026-01-23 13:37 GMT
பரமத்தி வேலூர்,ஜன.23: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு உதவி பெறும் கந்தசாமி கண்டர் கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு அரசு மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் P. சாந்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரத் திட்ட இயக்குனர் செல்வராஜ் (நாமக்கல்) முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மூர்த்தி கலந்து கொண்டு கல்லூரியின் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் 371 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி சிறப்புரையாற்றினார். மேலும் இவ்விழாவில் வேலூர் பேரூர் திமுக செயலாளர் முருகன், நாமக்கல் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், ஒன்றிய பொறுப்பாளர்கள் சாமிநாதன், லலித்குமார், பொத்தனூர் பேரூர் செயலாளர் கருணாநிதி, வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், வேலூர் பேரூர் கழக அவைத் தலைவர் மதியழகன் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி விலங்கியல் துறை தலைவர் சேதுராமன் நன்றியுரை வாசித்தார்.

Similar News