இருச்சக்கரவாகனம் மீது தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பலி - பேருந்து ஓட்டுநர் கைது - நல்லூர் போலீசார் விசாரணை.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த நடந்தை புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கவின்குமார் ( வயது 30), சக்திவேல் ஆகிய இருவரும் வசந்தபுரத்திற்கு இருச்சக்கரவாகனத்தில் வந்துள்ளார்.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-01-23 12:13 GMT
அதேப்போல திருச்செங்கோட்டில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு பரமத்தி வேலூருக்கு வந்துள்ளது. அப்போது வசந்தபுரத்தில் முன்னாடி சென்ற இருச்சக்கரவாகனம் மீது தனியார் பேருந்து மோதி விட்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மினி சரக்கு ஆட்டோ மீதும் மோதியது. இதில் படுகாயமடைந்த கவின்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதிஷ்டவசமாக எந்தவிதமான காயங்களும் இல்லாமல் சக்திவேல் உயிர் தப்பினார் மேலும் உயிரிழந்த கவின்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுநர் விக்னேஷ் என்பவரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்