கரூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
கரூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.;
கரூரில் போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பயணத்தின் போது இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சாலை விதிகளை கடைபிடித்து சென்றாலே விபத்துக்களை தடுக்க இயலும். பெருகிவரும் வாகன பெருக்கத்தால் சாலையில் விபத்துக்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது. விபத்துகளினால் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தமிழக முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் பசுபதிபாளையம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நந்தகுமார் தலைமையில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வலியுறுத்தியும், மகிழுந்து ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிய வலியுறுத்தியும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கலை அறிவியல் கல்லூரி மாணாக்கர்கள் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திவாறு தாந்தோணி மலை வரை சென்றனர்.